×

கர்நாடகா செல்லும் ‘வீரம்’!

கன்னடத்தில் ரீமேக் செய்யப்படுகிறது அஜித்தின் வீரம்.
சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித், தமன்னா, விதார்த், சந்தானம் மற்றும் பலர் நடித்துள்ள திரைப்படம் வீரம்.

இப்படம் வருகின்ற ஜனவரி 10ம் திகதி பொங்கல் விருந்தாக திரைக்கு வருகிறது.

இந்நிலையில் வீரம் படத்தை கன்னடத்தில் ரீமேக் செய்ய உள்ளனர்.

இதுகுறித்து கன்னட பட தயாரிப்பாளர் கே.மஞ்சு கூறுகையில், வீரம் படத்தின் கன்னட ரீமேக் உரிமையை பெற்றிருக்கிறேன் என்றும் விரைவில் நடிகர், நடிகைகள், இயக்குனர்கள் தெரிவு நடக்க உள்ளது எனவும் கூறியுள்ளார்.