×

கராத்தே மாஸ்டர் நயன்தாரா!

கராத்தே மாஸ்டராக அவதாரம் எடுத்துள்ளார் நயன்தாரா.
ஜெயம்ராஜா மீண்டும் தன் தம்பியை வைத்து ஒரு படம் இயக்கிக் கொண்டிருக்கிறார்.

பெயரிப்படாத இப்படத்தில் ஜெயம்ரவி ஹீரோவாக நடிக்க , நயன்தாரா ஹீரோயினாக நடிக்கிறார்.

மேலும் படத்தில் ஹாக்கி விளையாட்டு வீரராக ஜெயம் ரவி நடிக்கிறாராம்.

நயன்தாரா கராத்தே மாஸ்டராக நடிக்கிறாராம்.

இவர்கள் இருவரும் பொலிஸ் அதிகாரிகளாகி, வில்லன்களின் சதித் திட்டங்களை எப்படி முறியடிக்கிறார்கள் என்பதை ஆக்ஷன் பொறி பறக்க படத்தில் சொல்கிறார்களாம்.

இதில் நயன்தாராவுக்கு ஹீரோவுக்கு இணையான வேடம் என்பதால், ஆக்ஷன் காட்சிகளில் ஆச்சர்யப்படும் அளவுக்கு நடித்துக்கொண்டு இருக்கிறார்.