×

சூப்பர்ஸ்டாருடன் மீனா: தமிழுக்கு வருகிறார்!

மலையாளத்தில் சூப்பர் ஸ்டார் ஜோடியாக மீனா நடித்த படம் தமிழில் ரீமேக் செய்யப்படுகிறது.
மீனா திருமணத்துக்கு பிறகு மலையாளத்தில் மோகன்லால் ஜோடியாக டிரிஷ்யம் என்ற படத்தில் நடித்தார்.

இப்படம் சமீபத்தில் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடியது.

இதை தமிழில் ரீமேக் செய்யும் உரிமையை பெற பலர் போட்டியிட்டனர்.

இறுதியில் நடிகை ஸ்ரீப்ரியா கணவர் ராஜ்குமார் கைக்கு கிடைத்துள்ளது.

இவர் 22 பிமேல் கோட்டயம் என்ற மலையாள படத்தை மாலினி 22 பாளையங்கோட்டை என்ற பெயரில் தமிழில் ரீமேக் செய்து வருகிறார்.