×

ராஜமரியாதையில் டாப்சி!!

பஞ்சாப்பில் ராஜமரியாதை கிடைத்த சந்தோஷத்தில் இருக்கிறாராம் டாப்சி.
ரன்னிங் ஷாதி.காம் என்ற திரைப்படம் பஞ்சாப்பில் இருக்கிற பழமை வாய்ந்த கோட்டைகளில் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்ட டாப்ஸிக்கு, அந்த கோட்டைகளில் வசிக்கும் ராஜ வம்சத்தினரின் ராஜ உபச்சாரமும் கிடைத்திருக்கிறது.

ஒவ்வொரு நாளும் படப்பிடிப்பு முடிந்த பின், அவர்கள் அளித்த விருந்தில் பாஞ்சாப்பின் சிறப்பு வாய்ந்த உணவு வகைகளை எல்லாம் ஒரு பிடிபிடித்திருக்கிறாராம்.

அதோடு தான் உட்பட படப்பிடிப்புக் குழுவினரை விழுந்து விழுந்து கவனித்த ராஜவம்சத்தினர் மிகவும் எளிமையாக பழகியதையும் பெருமையுடன் கூறியுள்ளார் டாப்ஸி.