| அஜித் நடிப்பில் வெளியாகவிருக்கும் வீரம் படத்துக்கு தணிக்கைக் குழு ‘யு’ சான்றிதழ் வழங்கியுள்ளது. |
| ரசிகர்களின் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கு படம் வீரம். விஜயா நிறுவனம் தயாரித்து சிவா இயக்கத்தில் பொங்கலுக்கு வெளியாகவிருக்கும் இப்படத்தின் சிறப்புக் காட்சி தணிக்கைக் குழுவுக்கு நேற்று போட்டுக் காட்டப்பட்டது. படம் சிறப்பாக வந்திருப்பதாகக் கூறிய தணிக்கைக் குழு, அனைவரும் பார்க்கக் கூடிய படம் என்று யு சான்று வழங்கியுள்ளது. அஜித் தனது வழக்கமான பாணியில் இருந்து மாறுபட்டு நடித்திருப்பதோடு, கிராமிய களத்தை கொண்ட கதைக்கருவும் கொண்டு ரசிகர்களுக்கு தித்திக்கும் சர்க்கரை பொங்கல் படைக்க வருகிறது வீரம். |
