×

தொப்புள் விவகாரம் என்னை தூக்கிவிட்டது: நஸ்ரியாவின் நச் பதில்கள்!!

நய்யாண்டி பட பிரச்சனை எனக்கு நல்லதாகவே முடிந்துள்ளது என்று கூறியுள்ளார் நஸ்ரியா.
அனிஷ் இயக்கத்தில் ஜெய், நஸ்ரியா நடிப்பில் வெளியாகவிருக்கும் படம் திருமணம் என்னும் நிக்காஹ்.

இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்ட நஸ்ரியாவிடம், நய்யாண்டி சர்ச்சையில் பட வாய்ப்புகளை இழந்துவிட்டதாக சொல்கிறீர்களே என்று பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இதற்கு பதிலளித்த அவர், இது திருமணம் எனும் நிக்காஹ் பட நிகழ்ச்சி. இங்கு இந்தப் படம் தொடர்பாக மட்டுமே கேளுங்கள் என்று கூறியுள்ளார்.

பின்னர் இதே கேள்வியை அவரிடம் தனியாக கேட்டபோது, நான் எந்த படத்தில் இருந்தும் நீக்கப்படவில்லை. ஒப்பந்தமான படங்களில் நடித்துக் கொண்டுதான் இருக்கிறேன்.

சர்ச்சை காரணமாக நல்ல பட வாய்ப்புகளை இழந்து விட்டதாகவோ என்னை புறக்கணிப்பதாகவோ கருதவில்லை.

நய்யாண்டி படத்தில் ஏற்பட்ட பிரச்சினைகள் எனக்கு சாதகமாகவே அமைந்துள்ளன. என் குணம் என்ன என்பது எல்லோருக்கும் தெரிந்துவிட்டது.

மேலும் நான் எந்த மாதிரி கதாபாத்திரத்தில் நடிப்பேன் எதில் நடிக்க மாட்டேன் என நய்யாண்டி படசர்ச்சை வெளிச்சம் போட்டு காட்டிவிட்டது என்றும் இயக்குனர்கள் என்னை புதுப்படங்களில் நடிக்க அணுகும்போது என் கதாபாத்திரம் மற்றும் காட்சி விவரங்களை விளக்கமாக கூறிவிடுகின்றனர் எனவும் கூறியுள்ளார்.