×

யுஎஸ்சில் வசூல் மழை பொழியும் ‘பிரியாணி!!

வெங்கட்பிரபுவின் பிரியாணி திரைப்படம் அமெரிக்காவில் வசூல் மழை பொழிந்து வருகிறது.

அமெரிக்காவில் நாற்பது திரைகளில் வெளியான பிரியாணி திரைப்படம் முதல்வார இறுதியில் 85 ஆயிரம் டொலர்கள் வசூல் செய்துள்ளது.

19 திரைகளில் மட்டுமே வெளியான என்றென்றும் புன்னகை 27 ஆயிரம் டொலர்களை வசூலித்துள்ளது.

திங்கள் கிழமை 16 திரைகளில் பிரியாணி 4100 டொலர்களும், 11 திரைகளில் என்றென்றும் புன்னகை 3700 டொலர்களும் வசூலித்துள்ளன.

ஒரே நேரத்தில் அமெரிக்காவில் வெளியான இந்த இரண்டு படங்களையும் ஆத்மஸ் (ATMUS) எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

பொங்கலுக்கு வீரம் மற்றும் ஜில்லா ஆகிய இரண்டு படங்களையும் ஆத்மஸ் எண்டெர்டெயின்மண்ட் நிறுவனமே அமெரிக்காவில் வெளியிடுகிறது.