| வேலையில்லா பட்டதாரி படத்திற்காக மீண்டும் சிக்ஸ்பேக் அவதாரம் எடுத்துள்ளார் தனுஷ். |
| சினிமா உலகில் ஆக்ஷன் ஹீரோ என நிரூபிக்க கதாநாயகர்கள் எடுக்கும் புதுவகையான அஸ்திரம் தான் சிக்ஸ்பேக். ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் இயக்கத்தில் தற்போது தான் நடித்துவரும் வேலையில்லா பட்டதாரி படத்துக்காக இந்த அவதாரம் எடுத்துள்ளார். அனிருத் இசையமைக்கும் இந்தப்படத்தின் டீஸர் ஜனவரி 1ம் திகதியும், இசை காதலர்தினமான பிப்ரவரி 14ம் திகதியும் வெளியாகவுள்ளது. தனுஷ் ஏற்கனவே ‘பொல்லாதவன்’ படத்திலேயே சிக்ஸ்பேக் வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. |
