திமுக தலைவர் கருணாநிதியின் பேரனும், முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரியின் மகனும் பிரபல தயாரிப்பாளருமான தயாநிதி அழகிரியிடம் ஆபாச நடிகை சன்னி லியோன் ஒரு கோடி ரூபாய் கேட்டதாக கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது.
தயாரிப்பாளர் தயாநிதி அழகிரி தற்போது வடகறி என்ற படத்தை தயாரித்து வருகிறார். இந்த படத்தில் ஜெய், ஸ்வாதி ரெட்டி, ஆகியோர் நடித்து வருகின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இந்த படத்தை சரவணராஜன் என்ற இயக்குனர் இயக்கி வருகிறார்.
இந்த படத்தில் வரும் ஒரு குத்துப்பாடலுக்கு ஆட அமெரிக்காவில் ஆபாச ஆட்டமும், பாலிவுட்டில் கவர்ச்சி ஆட்டமும் போட்ட நடிகை சன்னிலியோனிடம் பேசப்பட்டு வந்தது. ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட தயாரிப்பாளரிடம் சன்னிலியோன் ஒரு கோடி ரூபாய் சம்பளம் கேட்டதாக கூறப்படுகிறது. ஆனால் ஒரு கோடி கொடுக்க தயாநிதி மறுத்துவிட்டாராம். ரூ.80 லட்சங்கள் வரை கொடுக்க அவர் ஒப்புக்கொண்டார். ஆனால் ஒரு கோடிக்கு ஒரு ரூபாய் குறைந்தாலும், ஆட மாட்டேன் என சன்னிலியோன் கறாராக கூறியதால் தற்போது வெறொரு முன்னணி நடிகையிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
ஒரே ஒரு பாடலுக்கு ஒரு கோடி ரூபாய் சம்பளமா? என கோலிவுட்டில் பல முன்னணி நடிகைகள் அதிர்ச்சி அடைந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
