×

அஜித் புகழ் பாடும் குஷ்பு!

அஜித்தை ஹாலிவுட் நடிகருடன் ஒப்பிட்டு புகழாரம் சூட்டியுள்ளார் குஷ்பு.
சினிமாவைப் பொறுத்தவரை 60 வயதை கடந்த ஹீரோக்கள் கூட தலையில் கறுப்பு சாயம் பூசிக் கொண்டு தங்களது ஹீரோ இமேஜை காத்துக் கொண்டு வருகின்றனர்.
ஆனால் அஜித்தோ மங்காத்தா, ஆரம்பம் படங்களையடுத்து இப்போது, வீரம் படத்திலும் நரைமுடி கலந்த தன் ஒரிஜினல் கெட்டப்பிலேயே நடித்துள்ளார்.
இதற்கு ரசிகர்கள் மத்தியில், வரவேற்பு இருப்பதை போல் சில சினிமா பிரபலங்களும் இதை வரவேற்றுள்ளனர்.
குறிப்பாக நடிகை குஷ்பு, அஜித்தை ஹாலிவுட் நடிகர் ஜார்ஜ் க்லுனியுடன், ஒப்பிட்டு கருத்து கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ஆரம்பம் படத்தில் அஜித்தை பார்த்தபோது ஹாலிவுட் நடிகர் ஜார்ஜ் க்லுனியை பார்ப்பது போன்று இருந்தது. கொலிவுட்டைப் பொறுத்தவரை, அஜித்தான், ஜார்ஜ் க்லுனி என்று தெரிவித்துள்ளார்.