தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு மற்றும் கிருத்தி சனான் நடிக்கும் “நீனோக்கடின்” என்ற தெலுங்கு படத்தின் போஸ்டர் வெளியீடு நேற்று முன் தினம் ஐதராபாத்தில் வெளியானது. இந்த போஸ்டரில் மகேஷ்பாபு கடற்கரை ஓரத்தில் நடந்து வருவது போலவும், அவரை தொடர்ந்து ஹீரோயின் நாய் மாதிரி ஊர்ந்து வருவது போலவும் போஸ்டர் அமைக்கப்பட்டிருந்தது.
இந்த போஸ்டரை பார்த்து கொதித்தெழுந்த பெண்கள் அமைப்பினர் படக்குழுவினர்களுக்கு கண்டனம் தெரிவித்தனர். மகேஷ்பாபு பெண்களை இழிவுபடுத்திவிட்டார். உடனே அவர் மன்னிப்பு கேட்கவேண்டும். இல்லாவிட்டால் இந்த படத்தை தடைசெய்ய நீதிமன்றத்தில் வழக்கு போடுவோம் என எச்சரிக்கை விடுத்தனர்.
இதுகுறித்து சமந்தா தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் “மிகவும் பிற்போக்குத்தனமாக நீனோக்கடின் படக்குழுவினர் சிந்தித்துள்ளனர். இதுபோன்ற காட்சிகளை எடுக்கும் முட்டாள்களை கடுமையாக தண்டிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இதை பார்த்து கொதித்தெழுந்த மகேஷ்பாபுவின் ரசிகர்கள் சமந்தாவின் டுவிட்டர் பக்கத்தில் அவரை கடுமையாக விமர்சனம் செய்கின்றனர். இதனால் அதிர்ச்சியடைந்துள்ள சமந்தா, இப்போது தனது டுவிட்டர் கணக்கையே மூடிவிடலாமா என்று யோசித்து வருகிறாராம்.
