பிரபல குளியல் சோப் நிறுவனமான லக்ஸ் லேட்டஸ்ட்டாக ஷாருக்கான், காத்ரீனா நடித்த விளம்பரத்தைதான் வெளியிட்டிருந்தது. தற்போது தீபிகா படுகோனே, இம்ரான்கானை வைத்து ஒரு புதிய விளம்பர படத்தை எடுத்துள்ளது. இந்த விளம்பரம் மும்பையில் உள்ள ஒரு ஸ்டுடியோவில் இரண்டு நாட்கள் படமாகியது. இந்த விளம்பரப் படத்தில் நடிக்க தீபிகா படுகோனேவுக்கு ஐந்து கோடி ரூபாயும், இம்ரான்கானுக்கு இரண்டு கோடி ரூபாயும் லக்ஸ் நிறுவனம் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
2010ஆம் வெளியான Break Ke Baad என்ற படத்தில் தீபிகா படுகோனேவும், இம்ரான்கானும் காதல் ஜோடியாக நடித்திருப்பார்கள். இந்த படத்தில் இவர்களின் கெமிஸ்ட்ரி குறித்து பாலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டது. மும்பை கல்லூரி மாணவர்கள் மிகவும் விரும்பி பார்த்த படம் இது என்று பல கருத்துக்கணிப்புகள் கூறின. அதனால் இந்த ஜோடியை தங்கள் விளம்பரப்படத்தில் நடிக்க வைக்க லக்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
சென்னை எக்ஸ்பிரஸ் மாபெரும் வெற்றிக்கு பின்னர் தீபிகாவின் சம்பளம் தாறுமாறாக உயர்ந்துள்ளது. தற்போது ஒரு படத்திற்கு ஐந்து கோடி வரை சம்பளம் பெறுகிறார் தீபிகா. ஒரு படத்துக்கு தரும் சம்பளத்தை தந்தால் மட்டுமே விளம்பரத்தில் நடிப்பேன் என்று தீபிகா கூறியதால் லக்ஸ் நிறுவனம் முழுசாக ஒரே செக்கில் ஐந்து கோடி கொடுத்து படப்பிடிப்பு நடந்துள்ளது.
முதுகு முழுவதும் தெரியும்படியான கவர்ச்சியான சிகப்பு நிற கவுன் அணிந்து தீபிகா நடிக்க, இம்ரான் கான் வழக்கம்போல கோட், சூட் போட்டு நடித்துள்ளார். இந்த விளம்பரம் தற்போது இணையத்தை கலக்கிக்கொண்டிருக்கிறது.