×

ஒரிசா பார்டரில் அசரடித்த அஜித்!

சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித், தமன்னா இணைந்து நடிக்கும் ‘வீரம்’ படம் பொங்கலுக்கு வெளியாகிறது.
இந்தப் படத்தில் தமன்னா, விதார்த், சந்தானம், நாசர், அப்புக்குட்டி உள்ளிட்ட பிரபலங்கள் நடிக்கிறார்கள். தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்திருக்கிறார்.
‘வீரம்’ படத்தின் சென்னை மற்றும் செங்கல்பட்டு விநியோக உரிமையை தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் ராம நாராயாணன் வாங்கியிருக்கிறாராம்.
இப்போது ‘வீரம்’ படத்துக்கு 1800 பிரிண்டுகள் போடப்படும் என்று தயாரிப்பாளர் தரப்பில் உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
அஜித் படத்துக்கு இதுவரை இல்லாத அளவுக்கு அதிகமான பிரிண்ட் எண்ணிக்கை என்பது குறிப்பிடத்தக்கது .
ஒரிசா பார்டரில் ஓடும் ட்ரெய்னில் அரக்கப்பரக்க ஒரு ஆக்‌ஷன் காட்சியை படம்பிடித்திருக்கிறார்களாம்.
டூப் போடலாம் என சிவா சொன்னதற்கு, தல மறுத்துவிட்டாராம். முழுக்க முழுக்க ட்ரெய்னில் நடக்கும் இந்த சண்டைக்காட்சியில் அஜித் ஆக்‌ஷனில் அசரடித்திருக்கிறார்.