×

ஒரே நாளில் வெளியாகும் இரண்டு அஜீத் படங்கள். டோலிவுட் ரசிகர்கள் குழப்பம்.!


அஜீத்தின் ஆரம்பம் தமிழில் மாபெரும் வெற்றி பெற்றதால் அந்த படத்தை தெலுங்கில் டப் செய்து வெளியிடுகிறார் தயாரிப்பாளர் ஏ.எம். ரத்னம். இதன் பாடல் வெளியீடு சமீபத்தில் நடைபெற்றது. இந்த படம் ஆட்ட ஆரம்பம் என்ற பெயரில் டிசம்பர் 6 முதல் வெளியாகிறது.
இந்நிலையில் இந்த படத்திற்கு போட்டியாக இன்னும் ஒரு படம் வெளியாகிறது. அஜீத்துக்கு போட்டியாக யார் வருவது என்று நீங்கள் நினைப்பது தெரிகிறது. அது வேறு யாருமல்ல.. அஜித்தேதான்… கடந்த 2007ஆம் ஆண்டு தமிழில் வெளிவந்த பில்லா படத்தை பில்லா 3 என்ற பெயரில் டப் செய்து அதே நாளில் வெளியிட ஒரு நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே பிரபாஸ் நடித்த பில்லா கடந்த 2009ஆம் ஆண்டு வெளியானது. பின்னர் அஜித்தின் பில்லா 2 அதே பெயரில் டப் செய்து தெலுங்கில் வெளியானது. எனவே பழைய பில்லாவை பில்லா 3 என்ற பெயரில் வெளியிட அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது.
ஒரே நேரத்தில் இரண்டு அஜீத் படங்கள் தெலுங்கில் டப் செய்து வெளியாக இருப்பதால் டோலிவுட் படவுலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.