×

சிம்புவின் டார்ச்சர் தாங்காமல் டுவிட்டரில் இருந்து திடீரென விலகிய ஹன்சிகா!!


சிம்புவுடன் உண்டான காதலை முதன்முதலில் டுவிட்டரில்தான் ஹன்சிகா பகிர்ந்தார். தற்போது அந்த டுவிட்டரே அவருக்கு எரிச்சலை உண்டாக்கியுள்ளதால் திடீரென இன்றுமுதல் அவர் டுவிட்டரில் இருந்து விலகிவிட்டார்.
சிம்புவுடன் இரண்டு படங்கள் நடித்த வந்த ஹன்சிகா, அவருடன் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆனதால் இருவரும் காதலித்தனர். இந்த செய்தியை ஹன்சிகா மிகவும் சந்தோஷமாக டுவிட்டரில் பகிர்ந்தார். தற்போது சிம்பு மீண்டும் நயன் தாராவுடன் நடிப்பதால் சிம்புவுடன் உண்டான காதல் பிரேக் அப் ஆகிவிட்டது. இதுகுறித்து டுவிட்டரில் ஹன்சிகாவுக்கு தினமும் ஏராளமான கேள்விகள் வருகிறது. இந்த கேள்விகள் எல்லாம் ஹன்சிகாவை எரிச்சல் அடைய வைத்தன. அதனால் தற்போதைக்கு டுவிட்டரில் இருந்து விலகுவதாக ஹன்சிகா இன்று அறிவித்துள்ளார்.
நயன் தாரா சிம்புவுடன் நடிப்பை மட்டும்தான் வைக்க முடியும், மீண்டும் காதல் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று கறாராக சொல்லிவிட்டார். ஹன்சிகாவும் காலை வாரிவிட்டுவிட்டார். எனவே சிம்பு அடுத்து யாரை கரெக்ட் செய்யலாம் என்று நீண்ட யோசனையில் இருப்பதாக கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது.