×

அண்ணனை காதலிக்கும் அமலாபால். கோலிவுட் அதிர்ச்சி.!




தமிழ், மலையாளம் தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளில் நடித்துக்கொண்டிருந்தாலும், அமலாபாலின் மார்க்கெட் இன்னும் டவுனாகவே இருக்கிறது. விஜய்யுடன் நடித்த தலைவா படம் ஏகப்பட்ட பிரச்சனைக்கு பிறகு ரிலீஸ் ஆனதால் பெரிதாக பேசப்படவில்லை. அமலாபால் அதில் நடித்திருந்தார் என்ற செய்தியை தவிர ரசிகர்களுக்கு அவரை பற்றி எதுவும் நினைவில் நிற்கவில்லை.

மேலும் தற்போது நடித்துக்கொண்டிருக்கும் படங்களிலும் அவருக்கு சொல்லிக்கொள்ளும்படியான கேரக்டர் இல்லையாம். எனவே ஏதாவது புரட்சியான கேரக்டரில் நடித்து பரபரப்பை ஏற்படுத்தவேண்டும் என்ற நினைப்பில் இருந்த அமலாபாலிடம் ஒரு உதவி இயக்குனர் கூறிய கதை சற்று யோசிக்க வைத்துள்ளதாம்.

சிந்துசமவெளி படத்தில் மாமனாரிடம் சிக்கிய மருமகளாகிய நடித்த அமலாபாலுக்கு கிட்டத்தட்ட அதேமாதிரியான வேடம்தானாம் இந்த கதையில். அண்ணன் உறவுள்ள ஒருவருடன் இவர் காதல் கொண்டு உறவு வைத்துக்கொள்வது மாதிரியான கதையாம்.

 இந்த கேரக்டர் கண்டிப்பாக தேசிய விருது பெறும் என்று அந்த உதவி இயக்குனர் ஆசைவார்த்தை காட்டுவதோடு, இந்த படத்தில் நடித்தால் மிகப்பெரிய தொகையை தயாரிப்பாளரிடம் பேசி வாங்கித்தருவதாகவும் உறுதி கூறியுள்ளார். எனவே இந்த படத்தில் நடிக்கலாமா வேண்டாமா என்று தனது நட்பு வட்டாரங்களில் ஆலோசித்து வருகிறாராம்.

ஏற்கனவே இதுமாதிரியான கேரக்டரில் நடித்ததால் பயங்கர எதிர்ப்புக்குள்ளான அமலாபால் மீண்டும் அந்த தவறை செய்யமாட்டார் என்று அவரது தரப்பு கூறுகின்றன.