×

விஷால் படத்துக்கு ஓகே - ஸ்ருதி!!

தமிழை மறக்காமல் இருக்க அவ்வப்போது சில படங்களில் பின்னணி பாடி வந்த ஸ்ருதியை விஷால் நடிக்கும் படத்தின் மூலம் மீண்டும் தமிழுக்கு அழைத்து வந்துள்ளனர். ஏற்கனவே ஆர்யாவுடன் மீகாமன் படத்தில் நடிக்க அழைத்தபோது கால்ஷீட் பிரச்னையை கூறி தன் இயலாமையை தெரிவித்த ஸ்ருதி இந்த முறை விஷால் படத்துக்காக ஓகே கூறியுள்ளார்.
தெலுங்கு இந்தி படங்களில் நடித்து வரும் ஸ்ருதிஹாசன் சில படங்களில் படுகிளாமராக நடித்து கிளாமர் நடிகையாகவும் உருவெடுத்து நிற்கிறார்.