×

நடிப்புக்கு தடை போடவில்லை - நஸ்ரியா!

நஸ்ரியா தமிழில் நம்பர் 1 இடத்தை எட்டிப்பிடித்து விடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நேரத்தில் திடீரென மலையாள இயக்குனர் பாசிலின் மகன் பஹத் பாசிலுக்கும் நஸ்ரியாவுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. ஆனாலும் நஸ்ரியா தொடர்ந்து நடித்து வந்தார்.
இந்நிலையில் திடீரென பஹத் பாசில் தொடர்ந்து சினிமாவில் நடிக்க நஸ்ரியாவுக்கு தடை போட்டு விட்டதாக செய்திகள் வெளியாகின. இதை அறிந்த நஸ்ரியா இதுவரை பஹத் வீட்டில் என் நடிப்புக்கு யாரும் தடை போடவில்லை என்று கூறி புதிய படங்களில் நடிக்க கதை கேட்டு வந்த நஸ்ரியா திடீரென புதிதாக ஒப்பந்தமான படங்களில் இருந்து விலகியுள்ளார்.