×

கோச்சடையான் படத்திற்கு புகழாரம் சூட்டும் ஹாலிவுட் தயாரிப்பாளர்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பிளட் ஸ்டோன் உள்பட பல ஹாலிவுட் திரைப்படங்களை தயாரித்த பிரபல தயாரிப்பாளர் அசோக் அமிர்தராஜ் நேற்று கோச்சடையான் படம் குறித்து தனது கருத்துக்களை ஊடகங்களிடம் தெரிவித்தார்.

Visual Effects, Motion Control, மற்றும் Digital Technologies போன்றவற்றிற்கு இதுவரை ஹாலிவுட் படங்கள் மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கும் என்ற நிலை தற்போது மாறியுள்ளது. தமிழ் மற்றும் இந்தி படங்களில் பலவித புது முயற்சிகள் செய்யப்பட்டு வருகிறது.

எனது இனிய நண்பர் ரஜினிகாந்த் நடித்த கோச்சடையான் படம் குறித்து நான் கேள்விப்பட்டவை எல்லாம் மிகவும் பிரமிப்பாக உள்ளது. இந்தியாவின் முதல் மோஷன் கேப்ட்சர் மூவி டெக்னாலஜியில் தயாரான கோச்சடையான் படம் மிகப்பெரிய வெற்றி பெறா ரஜினிகாந்த் அவர்களையும் அவரது மகள் சவுந்தர்யாவையும் நான் மனதார வாழ்த்துகிறேன்.

கண்டிப்பாக இந்த படம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மிகப்பெரிய அளவில் வரவேற்கப்படும் என்று உறுதி கூறுகிறேன். அவதார், டின் டின் படத்துக்கு பிறகு வெளிவரும் இந்த அதிநவீன டெக்னாலஜி படத்தை ஹாலிவுட்டிலும் பல பிரபலங்கள் பார்க்க ஆவலாக உள்ளதாக அசோக் அமிர்தராஜ் கூறியுள்ளார்.