எழுத்தாளர் ராஜு முருகனின் இயக்கத்தில் வெளிவந்த 'குக்கூ' படம் ஒரு சீரியசான படமாக இருந்தாலும், பாக்ஸ் ஆபீசில் நல்ல வசூல் கொடுத்து வருகிறது. குறைந்த பட்ஜெட்டில் தயாரான இந்த படம் தயாரிப்பாளர்களுக்கு நல்ல லாபத்தை கொடுத்துள்ளது.
இதனால் மிகவும் மகிழ்ச்சி அடைந்த தயாரிப்பு நிறுவனங்களான Fox Star Studios மற்றும் The Next Big Film Productions ஆகியவை இணைந்து இயக்குனர் ராஜு முருகனுக்கு ஒரு புத்தம் புதிய Renault Duster ஆடம்பர கார் ஒன்றை பரிசாக கொடுத்துள்ளனர். இந்த காரின் மதிப்பு சுமார் 10 லட்ச ரூபாய் ஆகும்.
இந்த சந்தோஷத்துடன் குக்கூ இயக்குனர் ராஜு முருகன் அடுத்த படத்திற்கான வேலைகளை ஆரம்பிக்க முடிவு செய்துவிட்டார். தனது அடுத்த படமும் இதயத்தை கசக்கி பிழியும் சோகப்படமாகத்தான் இருக்கும் என கூறியுள்ளார்.