×

ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி: பாலசந்தர் படத்தில் பரத்-நந்திதா!!

நீண்ட இடைவெளிக்கு பின்னர் கே.பாலசந்தரின் தயாரிப்பில் 555 ஹீரோ பரத் நடிக்கவிருக்கின்றார். இதற்கு முன் 2008 ஆம் ஆண்டில் பாலசந்தரின் கவிதாலயா தயாரிப்பில் திருவண்ணாமலை என்ற படத்தில் நடித்திருந்தார். அதன்பின்னர் தற்போது பாலசந்தரின் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் நடிக்க பரத் ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

இந்த படத்திற்கு "ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி" என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. பரத்துக்கு ஜோடியாக நந்திதா நடிக்கிறார். படிக்காத கிராமத்து இளைஞனுக்கும், மேல்படிப்பு பெற்ற பெண்ணுக்கு திருமணம் நடைபெறுகிறது. அதன்பின்னர் அவர்கள் இருவருக்கும் நடக்கும் பிரச்சனைகளை நகைச்சுவையுடன் கூற இருக்கும் படம்தான் இது. 

பூபதி பாண்டியனின் உதவியாளர் எல்.ஜி. ரவிச்சந்தர் இந்த படத்தை இயக்குகிறார். இந்த படத்தின் ஒரு முக்கிய கேரக்டரில் படவா கோபி நடிக்கின்றார்.

555 படத்திற்கு இசையமைத்த சைமன் இந்த படத்திற்கும் இசையமைக்கிறார். இந்த படத்தின் மொத்த படப்பிடிப்பும் வெறும் 35 நாட்களில் பழநியில் முடிக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். பி.ஜி.முத்தையா இந்த படத்தின் ஒளிப்பதிவாளராக பணி செய்கிறார். வரும் ஜூலை மாதம் இந்த படம் திரைக்கு வரும்.