×

நெடுஞ்சாலை. திரைவிமர்சனம்!!

நெடுஞ்சாலையில் வரும் லாரிகளை மடக்கி கொள்ளையடிக்கும் கும்பலில் ஒருவர் நாயகன் ஆரி. இவன் கொள்ளையடித்த கும்பலுக்கு ஒரு மலையாளி தலைவன். இவர்களின் திருட்டு வெற்றிகரமாக நடந்து கொண்டிருக்கும்போது நெடுஞ்சாலையில் ஓட்டல் வைத்திருக்கும் நாயகி ஷிவதா மீது நாயகன் ஆரிக்கு சிறு சிறு மோதலுக்கு பின் காதல் வருகிறது. 

ஆனால் அதே ஷிவதாவை ஆரியின் முதலாளியான மலையளியும் அடைய முயற்சிக்கின்றார். இதற்கு உள்ளூர் இன்ஸ்பெக்டர் பிரசாந்த் நாராயணனும் உதவி செய்கிறார்.

இந்நிலையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரசாந்த் நாராயணின் உதவியோடு ஷிவதா மீது விபச்சார பதிவு செய்ய வைக்கிறார் மலையாள முதலாளி. அந்த வழக்கில் இருந்து ஷிவதாவை ஆரி காப்பாற்றியதால், ஆரிக்கும் அவனுடைய முதலாளிக்கு மோதல் வெடிக்கிறது. காதலிக்காக முதலாளியை எதிர்க்கும் ஆரி, ஆரியை ஏதாவது ஒரு வழக்கில் கைது செய்ய துடிக்கும் இன்ஸ்பெக்டர் பிரசாந்த் நாராயண் ஒருபுறம், ஷிவதாவை அடைந்தே தீருவேன் என்று சபதமிடும் மலையாளி ஒருபுறம் என கதை விறுவிறுப்பாக போகிறது. முடிவில் யார் வெற்றி பெற்றார்கள் என்பதை மிகப்பெரிய திருப்பங்களுடன் க்ளைமாக்ஸில் முடிகிறது.

ஒரு நல்ல த்ரில் படத்தை தமிழில் பார்த்து ரொம்ப நாளாகிறது. அந்த குறையை போக்கியிருக்கிறது நெடுஞ்சாலை. லாரியை மடக்கி கொள்ளையடிக்கும் ஆரம்ப காட்சிகளுடன் ரசிகர்களை நிமிர வைக்கிறார் இயக்குனர் கிருஷ்ணா.

உதயநிதி ஸ்டாலின் இந்த படத்தை பார்த்து உடனே வெளியிட ஒப்புக்கொண்டதில் அர்த்தம் இருக்கிறது என்பது படம் பார்த்த பிறகுதான் புரிகிறது.

இசை, ஒளிப்பதிவு, எடிட்டிங், ஆகிய அனைத்து அம்சங்களும் தரம். படத்தில் தம்பி ராமைய்யா தவிர கிட்டத்தட்ட அனைவரும் புதுமுகமாக இருந்தாலும், எல்லோரும் பல வருடங்கள் அனுபவம் வாய்ந்த நடிகர்கள் போல நடித்துள்ளனர். வாழ்த்துக்கள்.

நெடுஞ்சாலை. ஒரு த்ரில் பயணம்.