×

ரஜினி, கமலுடன் இணையும் இயக்குனர் ஷங்கர்!

இயக்குனர் ஷங்கர் விக்ரமை வைத்து " ஐ " படத்தை இயக்கிகொண்டிருக்கிரார் இப்படம் முடியும் தருவாயில் இருக்க அடுத்த படத்துக்கான யோசனையில் இறங்கிவிட்டாராம் பிரம்மாண்ட இயக்குனர்.
தற்போது தமிழ் சினிமாவில் சிங்கம்-2 , பீட்சா-2 விஸ்வரூபம்-2, ஜெய்ஹிந்த்-2 என பல படங்களின் இரண்டாம் பாகங்கள் வளர்ந்து கொண்டிருக்கும் நிலையில் இதுவரை இரண்டாம் பாகம் இயக்காமல் இருந்த இயக்குனர் ஷங்கருக்கும் இரண்டாம் பாகம் இயக்கும் ஆசை வந்துவிட்டதாம்.

அதனால், தான் 1996ல் கமலை வைத்து இரண்டு வேடங்களில்இயக்கிய இந்தியன் படத்தையும், 2010ல் ரஜினியை இயக்கிய எந்திரன் ஆகிய படங்களின் இரண்டாம் பாகங்களை அடுத்தடுத்து இயக்க திட்டமிட்டுள்ளாராம். முதலில் ரஜினியை வைத்து எந்திரன்-2வை இயக்க முடிவு செய்து இருக்கிறாராம்.

அதையடுத்து, கமலை வைத்து இந்தியன்-2வை இயக்குகிறாராம். தற்போது விஸ்வரூபம்-2 படத்தை முடித்து விட்டு இறுதிகட்ட பணிகளில் ஈடுபட்டுள்ள கமல், அதைத் தொடர்ந்து உத்தமவில்லன், த்ரிஷ்யம் ரீமேக் ஆகிய படங்களில நடிப்பதால், இந்த படங்களை முடித்து விட்டு ஷங்கர் இயககும் படத்தில் இணைவார் என்று கூறப்படுகிறது.