×

ஐதராபாத்தில் விஜய், ஏ.ஆர்.முருகதாஸ் படப்பிடிப்பு !

விஜயை வைத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிகொண்டிருக்கும் புது படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கொல்கத்தாவில் தொடங்கி, பின்பு அதனைத் தொடர்ந்து சென்னை சர்வதேச விமான நிலையத்தில் ஒரு பாடலை படமாக்கினார்கள்.
தற்போது அடுத்த கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் ஃபிலிம் சிட்டியில் இன்று தொடங்கியிருக்கிறது. சுமார் 30 நாட்கள் படப்பிடிப்பு நடக்கும் என படக்குழு. அறிவித்து இருக்கிறது.

இப்படத்தில் வரும் ஜெயில் காட்சிகளை ராஜமுந்திரியில் உள்ள நிஜ சிறைச்சாலையில் படமாக்க திட்டமிட்ட படக்குழு, அங்கு தெலுங்கானா பிரச்சனை நடைபெற்ற வருவதால் ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் ஜெயில் செட் போட்டு அங்கு படப்பிடிப்பு நடத்தி வருகின்றனர்.