பற்பல வெற்றிப்படங்களைக் கொடுத்ததன் மூலம் மக்கள் மனத்தில் இடம்பிடித்திருக்கும் பிரபல நட்சத்திரங்களை விடவும், தான் நடித்த ஒரிரு படங்களின் மூலம் சமூக ஊடகங்களில் அதிகம் பேசப்படும் அல்லது கிண்டலடிக்கப்படும் நடிகரான பவர் ஸ்டார் தன்னை வைத்துப் படமெடுத்த
முந்தைய தயாரிப்பாளர்கள் தனக்குத் தரவேண்டிய சம்பளத்தைத் தராமல் ஏமாற்றிவிட்டதாகக் கூறியுள்ளார்.
சினிமாக்களில் காமெடி செய்வதை விடவும், தான் பங்குபெறும் பொது நிகழ்ச்சிகளிலும் லைவ் காமெடிகளைச் செய்து பெரும்பாலான மக்களுக்கு அறிமுகமானவர் பவர் ஸ்டார் சீனிவாசன். தன்னைக் கிண்டல் செய்வோருக்கும் புன்னகை மாறாமல் பதிலளிப்பவர் பவர் ஸ்டார். இதன் மூலமே மக்களிடமும் பெரும் அறிமுகத்தைப் பெற்றவர்.
சந்தானம் தயாரித்து நடித்த கண்ணா லட்டு தின்ன ஆசையா திரைப்படம் இவருக்கு மேலும் புகழைச் சேர்த்தது.
சொந்தச் செலவில் போஸ்டர்களை ஒட்டி, படங்களை ஓட்டி, பின்னர் படிப்படியாக மக்களிடம் ஒரு வித்தியாசமான காமெடியனாக உருமாறியிருக்கும் பவர் ஸ்டாரை தற்பொழுது அடிக்கடி புதிய படங்களில் பார்க்கமுடிகிறது. ஆனால் தன்னை நடிக்க அழைக்கும் தயாரிப்பாளர்கள் படத்தின் வெளியீட்டிற்குப் பின்னர் தன்னைக் கண்டுகொள்வதில்லை என்றும், தனக்குத் தரவேண்டிய சம்பளத்தையும் தருவதில்லை என்றும் வேதனை தெரிவித்துள்ளார்.
இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் சியான் விக்ரம் - எமி ஜாக்சன் நடித்திருக்கும் ஐ படத்திலும் பவர் ஸ்டார் நடித்திருப்பது
குறிப்பிடத்தக்கது.