இனி எல்லாமே கவர்ச்சிதான்: ப்ரணிதாவின் அதிரடி முடிவு

சினிமாவில் எண்ட்ரி ஆகும் வரை ஒவ்வொரு நடிகைகளுமே ஆரம்பத்தில் கவர்ச்சி விசயத்தில் கொஞ்சம் மக்கர் பண்ணத்தான் செய்வார்கள். உதயன், சகுனி படங்களில் நடித்த ப்ரணிதா கொஞ்சம் ஓவராகவே பில்டப் கொடுத்தார். என்னிடம் இருக்கிற அழகுக்கு நான் துளிகூட கவர்ச்சி காட்டாமல் திரையில் வந்து நின்றாலே போதும் ஆடியன்ஸ் கண்ணிமைக்காமல் ரசிப்பார்கள் என்று தனது அழகு மீதிருந்த நம்பிக்கையில் ஓவராக பேசினார்.
அதுமட்டுமின்றி, இப்போது நான் கோலிவுட்டுக்கு வந்து விட்டதால், அடுத்தபடியாக தமன்னா, ஹன்சிகா ஆகியோர் வீட்டுக்கு போகும் நேரம் வந்து விட்டது என்று சொடக் போட்டு பேசினார். ஆனால், சகுனி எதிர்பாராதவிதமாக சறுக்கி விட்டதால், ப்ரணிதா தான் கோலிவுட்டில் இருந்து வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது. அதனால் படவாய்ப்புகளே இல்லாமல் கன்னடத்துக்கு செல்ல வேண்டிய கட்டாயத்துக்கு ஆளானார்.
ஆனால், அங்கும் அவரால் நிலைக்க முடியவில்லை. அதனால் இப்போது மீண்டும் தெலுங்கு சினிமாவை அட்டாக் பண்ணியுள்ள ப்ரணிதா, பவன் கல்யாணுடன் நடித்த அத்தரின்டிக்கி தாரிடி என்ற படம் தன்னை பேச வைத்ததால், ஆந்திராவில் அதிரடியாக பிரவேசிக்கத் தொடங்கியிருககிறார். மேலும், இதற்கு முன்பு டைரக்டர்கள் கதை சொல்லும்போதே அதில் கவர்ச்சி தென்படுகிற காட்சிகளாகப்பார்த்து கத்தரித்து வந்த ப்ரணிதா, இப்போது நீச்சல் உடையில் நடிக்கவும் டபுள் ஓ.கே சொல்லி வருகிறார்.
இதனால், தற்போது அங்கு கவர்ச்சியில் போட்டுத்தாக்கிக்கொண்டிருக்கும் அஞ்சலி, தமன்னா உள்ளிட்ட நடிகைகள், ப்ரணிதாவின் புதுக்கவர்ச்சி தங்களது மார்க்கெட்டுக்கு வேட்டு வைத்து விடுமோ என்று ஆழ்ந்த கவலையில் உறைந்துள்ளனர்