சினிமா டைரக்டர் பாலு மகேந்திராவுக்கு இன்று அதிகாலை ‘திடீர்’ உடல் நலக்குறைவு ஏற்பட்டது. மூச்சுவிட சிரமப்பட்டார். உடனடியாக அவரை வடபழனியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர்.
சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் மரணமடைந்தார். பாலு மகேந்திரா தமிழில் இயக்கிய முதல் படம் ‘அழியாத கோலங்கள்’. 1979ல் இப்படம் வந்தது. தொடர்ந்து ‘மூடு பனி’ படத்தை டைரக்டு செய்தார். 1982ல் கமல், ஸ்ரீதேவி ஜோடியாக நடித்த ‘மூன்றாம் பிறை’ படத்தை டைரக்டு செய்தார்.
இப்படம் கமலுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெற்று கொடுத்தது. ‘நீங்கள் கேட்டவை’, ‘உன் கண்ணில் நீர் வழிந்தால்’, ‘ரெட்டை வால் குருவி’, ‘வீடு’, ‘சந்தியா ராகம்’, ‘சதிலீலாவதி’, ‘ஜூலி கணபதி’ உள்பட பல படங்களை டைரக்டு செய்துள்ளார்.
தெலுங்கு, மலையாளம், கன்னடம் படங்களையும் இயக்கியுள்ளார். கடைசியாக ‘தலைமுறைகள்’ என்ற படத்தை டைரக்டு செய்து முக்கிய கேரக்டரிலும் நடித்தார். இப்படம் கடந்த வருடம் ரிலீசானது. ஏராளமான படங்களுக்கு ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றி உள்ளார். இவருக்கு 74 வயது ஆகிறது.