‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ என்ற படத்தில் சந்தானம் ஹீரோவாக நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் ஆந்திர மாநிலம் கடப்பாவில் நடைபெற்றது. இந்த படத்தை சந்தானம் அவரே தயாரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடப்பாவில் படப்பிடிப்பு நடக்கும்போது உள்ளூர் தாதாவின் ஒருவரின் ஆட்கள் திடீரென படப்பிடிப்பு தளத்தில் நுழைந்து எங்கள் அனுமதியில்லாமல் எப்படி படப்பிடிப்பு நடத்தலாம் என பிரச்சனை செய்தனர். அதன்பின்னர் அந்த தாதாவை நேரில் சந்திக்க சென்றாராம் சந்தானம்
காமெடி காட்சிகளில் தாதா வில்லனை பார்க்க போவது போன்ற சந்தானம், நிஜத்தில் மிகவும் பயந்தே போய்விட்டாராம். சினிமாவில் வரும் வில்லன்களை போல் இல்லாமல் மிகவும் கொடூரெமாக இருந்த தாதா, படப்பிடிப்பு பிரச்சனை இல்லாமல் நடக்கவேண்டும் என்றால் ஒரு பெரும்தொகை தனக்கு தரவேண்டும் என்று நிபந்தனை விதித்தாராம். அதோடு மட்டுமின்றி அந்த படத்தில் ஒரு காட்சியில் தன்னை நடிக்கவைக்கவேண்டும்என்றும் கூறினாராம். வேறு வழியின்றி அந்த தாதாவுக்குஒருசில காட்சிகள் வைத்து படப்பிடிப்பை முடித்துள்ளனர்..
