பாபி ஜசூஸ் என்னும் புதிய படத்தில் நடிக்கிறார் வித்யா பாலன். மிகவும் சவாலான கதாபாத்திரத்தை எதிர்பார்க்கும் வித்யா பாலன் இந்த படத்தில் ஒரு துப்பறியும் நிபுணராக நடித்திருக்கிறாராம்.
படத்தில் பிச்சை எடுப்பது போல ஒரு காட்சி உள்ளதாம், அக்காட்சிகாக ஹைதராபாத் ரயில்வே நிலையம் அருகில் நிஜமாகவே பிச்சை எடுத்தாராம்.
இவரை பிச்சைகாரன் என்று நினைத்து காசு போட்ட ஒரு பெண்மணி, இவரை பார்த்து “நல்ல தானே இருக்குற, அப்புறம் ஏன் பிச்சை எடுக்குற” என்று கேட்டாராம்.
ஒன்னும் சொல்றதுக்கு இல்ல!!!