தொடர்ச்சியான படப்பிடிப்பு காரணமாக மீண்டும் அவரது சருமம் பாதிக்கப்பட்டது. மும்பையில் லிங்குசாமியின் படத்தின் படப்பிடிப்பில் இருந்த போது அவரின் சருமப் பிரச்சனை அதிகமானது. அதனைத் தொடர்ந்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு மொத்த யூனிட்டும் சென்னை திரும்பியது.
இதுகுறித்து பேட்டிளித்த சமந்தா, ஐந்து படங்களில் நடித்து வருகிறேன். தொடர்ச்சியாக நடிக்கும்போது, நானும் மனுஷிதானே, எனக்கும் உடல்நலக்குறைவு ஏற்படத்தானே செய்யும். லிங்குசாமியிடம் இரண்டு நாள் ஓய்வு கேட்டேன். அவரது படத்தின் படப்பிடிப்பு இந்த மாத இறுதியில் 23 ஆம் தேதி தொடங்கி ஜனவரி 4 ஆம் தேதிவரை நடக்கயிருக்கிறது. அதில் கலந்து கொள்வேன்.
அதற்குமுன் தெலுங்குப் படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்கிறேன் என்று தெரிவித்தார்.
லிங்குசாமி சமந்தா தவிர்த்து சூர்யா மட்டும் இடம்பெறும் காட்சிகளை இந்த வாரத்தில் படமாக்க திட்டமிட்டுள்ளார்.