
ஹன்சிகா புதுமுகம் சித்தார்த்துடன் சேர்ந்து உயிரே உயிரே படத்தில் நடித்து வருகிறார்.
கோவாவில் உள்ள பாகா கடற்கரையில் பாடல் காட்சியை படமாக்கிக் கொண்டிருந்தனர். இதை பார்க்க கடற்கரையில் பெரும் கூட்டம் கூடிவிட்டது.
கடற்கரையில் கூடிய ரசிகர்கள் கூட்டம் ஹன்சிகா ஹன்சிகா என்று அவரது பெயரை கூப்பிட ஆரம்பித்தனர். மேலும் தங்கள் செல்போன்களில் ஹன்சிகாவை புகைப்படம் எடுத்தனர்.
பாதுகாவலர்களையும் மீறி ஹன்சிகாவின் அருகில் வந்த சில ரசிகர்கள் ஹன்சிகாவின் கையை பிடித்து இழுத்தனராம்.
பின்னர் பாதுகாவலர்கள் ஹன்சிகாவை மீட்டு காரில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.
பின்னர் பாதுகாவலர்கள் ஹன்சிகாவை மீட்டு காரில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து ஹன்சிகா கூறுகையில், நான் உயிரே உயிரே படப்பிடிப்பில் இருந்தபோது ரசிகர்கள் கூட்டம் கூடியது. தற்போது தென்னிந்திய மொழி படங்களில் நடித்து வருவதால் அவர்களுக்கு என்னை அடையாளம் தெரியாது என்று நினைத்தேன்.
ஆனால் என்னை குழந்தை நட்சத்திரமாக பார்த்த அவர்கள் அடையாளம் கண்டு என் பெயரைச் சொல்லி அழைத்தனர் என்றும் இதனால் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டு வேறு இடத்திற்கு மாற்றப்பட்டது எனவும் கூறியுள்ளார்.