ஷங்கர் தற்போது “ஐ” என்ற படத்தை பிரமாண்டமாக எடுத்துக்கொண்டிருக்கிறார். ஷங்கர் படத்தின் கதை படம் ரிலீஸ் ஆகும்வரை வெளியே தெரியாது. அவ்வளவு ரகசியமாக கதையையும், காட்சிகளையும் அமைத்திருப்பார். ஆனால் “ஐ” விஷயத்தில் எல்லாமே தலைகீழ். “ஐ” படத்தின் ஒன்லைன் கதை இணையத்தில் கசிந்துவிட்டது. இது படக்குழுவில் இருக்கும் ஒருவரின் அஜாக்கிரதை என்று தெரிந்து ஷங்கர் கடுங்கோபத்தில் இருக்கிறார்.
“ஐ” படத்தின் கதை ஐந்து நபர்களை மட்டுமே முக்கியமாக சுற்று வருகிறது. ஒரு டாக்டர், மாடல் அழகி எமி ஜாக்சன்,, விக்ரம், மற்றும் இரண்டு நபர்கள். இந்த ஐந்து நபர்களையும் வில்லனின் சதியால் விஷத்தன்மையுள்ள கெமிக்கல் தாக்குகிறது. உடல் முழுவதும் விஷம் பரவியதால் இவர்களின் உடல் மெலிந்து பரிதாபமாக காட்சியளிக்கிறது. இதிலிருந்து இவர்கள் மீண்டு வந்து மற்றவர்களையும் இந்த விஷத்தன்மையுள்ள கெமிக்கல் தாக்காமல் இருக்க இவர்கள் எடுக்கும் விஸ்வரூபம்தான் படத்தின் கதை.
இந்த கதையில் வில்லனாக சீனாவை சேர்ந்த நடிகர் ஒருவர் நடித்திருக்கிறார். இந்த படம் தயாரிக்க தமிழில் இதுவரை இல்லாத அளவுக்கு பட்ஜெட் எகிறியுள்ளது. இதுவரை மட்டுமே ரூ.145 கோடி செலவாகியுள்ளதாக தயாரிப்பாளர் தரப்பில் கூறப்படுகிறது. ஆஸ்கார் ரவிச்சந்திரன் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவை கவனிக்க, எழுத்தாளர்கள் சுபா திரைக்கதை வசனம் எழுதியுள்ளார்கள்.