கருப்பசாமி குத்தகைதாரர் என்ற படத்தில் அறிமுகமான நடிகை மீனாட்சி, பின்னர் சுந்தர் சியுடன் பெருமாள், லாரன்ஸுடன் ராஜாதி ராஜா, படங்களில் நடித்தார். பின்னர் மந்திரப்புன்னகை, அகம் புறம் போன்ற படங்களில் கவர்ச்சியாக நடித்தும், அவருக்கு கோலிவுட்டில் வாய்ப்பு எதுவும் சொல்லிக்கொள்ளும்படி வரவில்லை.
பின்னர் அவர் சினிமாவில் இருந்து விலகி மும்பையில் காதலனுடன் செட்டிலாகிவிட்டார். தற்போது ஒருபுதுமுக இயக்குனரின் வில்லங்கத்தில் சிக்கியுள்ளார் மீனாட்சி. அதாவது அறிமுக இயக்குனர் ரா.நா.சரவணன் இயக்கும் வில்லங்கம் என்ற படத்தில் நடிக்கிறார்.
இவரை ஒப்பந்தம் செய்ய மும்பை சென்ற சரவணன், அவரை நேரில் சந்தித்தவுடன் நீங்கள்தான் என் படத்தின் கதாநாயகி என்று கூறி அட்வான்ஸை கொடுத்துவிட்டு, போட்டோஷூட்டுக்கான தேதியையும் முடிவு செய்துவிட்டு வந்தார்.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு போட்டோஷூட்டுக்கு வந்த மீனாட்சியை பார்த்து அதிர்ந்து போனார் இயக்குனர். அந்த அளவுக்கு உடம்பில் துணி இருக்கிறதா? இல்லையா? என்று சந்தேகத்துடன் பார்க்கும் அளவுக்கு இருந்தது மீனாட்சியின் காஸ்ட்யூம். உடனே இயக்குனர் மீனாட்சியை தனியாக அழைத்து, உங்களுக்கு இந்த படத்தின் கவர்ச்சியே இல்லை. முழுக்க முழுக்க சேலை கட்டித்தான் இந்த படத்தில் நடிக்கவேண்டும் என்று கூறினாராம். மீனாட்சிக்கோ பயங்கர ஆச்சரியம். எனக்கு புடவை கட்டி டீஸண்ட்டான ரோலா? என ஆச்சரியமாக கேட்க, அப்போதுதான் இயக்குனர் ஒரு உண்மையை போட்டு உடைத்தார். மீனாட்சிக்கு இயக்குனர் கொடுத்தது ஹீரோவின் அக்கா வேடமாம். மீனாட்சி இதை கேட்டதும் பயங்கர அதிர்ச்சியடைந்தார் என்பதை சொல்லவும் வேண்டுமா?