| மீண்டும் சினிமா உலகில் கால்தடம் பதிக்க வருகிறார் ரம்பா. |
| ஒரு காலத்தில் தனது நடிப்பாலும், அழகாலும் ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து கனவு தேவதையாக வலம் வந்தவர் ரம்பா. மனசுக்கு பிடித்தமான தொழில், நல்ல சம்பளம் கொடுத்தால் யார்தான் வேண்டாம் என்பார்கள் அதனால்தான் நடிக்க சம்மதம் சொன்னேன் என்கிறார் ரம்பா. வெளிநாட்டிலிருந்து இந்தியா வந்ததும் அடுத்த ரவுண்டை ஆரம்பிக்க இருக்கிறார். இந்த தகவல் தெரிந்த சினிமா இயக்குனர்கள், ஹீரோ-ஹீரோயின்களுக்கு அழகான அக்கா அல்லது அண்ணி கதாபாத்திரங்களில் நடிப்பதற்கு ஒப்பந்தம் செய்ய முடிவு செய்திருக்கிறார்களாம். |
