×

திரையரங்கில் பட்டையை கிளப்பிய சோனாக்ஷி சின்ஹா!!

காலில் பேண்டேஜ் போடும் அளவுக்கு துள்ளிக் குதித்து ஆடியுள்ளாராம் சோனாக்ஷி சின்ஹா.

பிரபுதேவா இயக்கத்தில் ராம்போ ராஜ்குமார் என்ற இந்தி படம் வெளியாகியுள்ளது.

இதில் பாலிவுட்டின் சாக்லேட் பாய் ஷாகித் கபூர் ஆக்ஷன் அவதாரம் எடுத்துள்ளார்.

இவருடன் ஜோடி சேர்ந்திருப்பது இளம் ரசிகர்களின் இதயங்களில் டிரம்ஸ் வாசிக்கும் சோனாக்ஷி சின்ஹா.

இந்த படத்தின் சிறப்பு காட்சி மும்பையில் திரையிடப்பட்டபோது, சோனாக்ஷி தோன்றும் ஒவ்வொரு காட்சிக்கும் கைதட்டல், காதை பிளந்ததாம்.

இதனால் படத்தின் இடைவேளையின்போது தன் மகிழ்ச்சியை கொண்டாடும் வகையில் திரையரங்கில் துள்ளி குதித்து ஆட்டம் போட்டுள்ளார் சோனாக்ஷி.
இதில் அவரின் காலில் பலத்த அடிபட்டு பேண்டேஜ் போடும் நிலை ஏற்பட்டுள்ளது.