×

உலகின் கவர்ச்சியான ஆசியப் பெண் கத்ரினா!!

உலகிலேயே கவர்ச்சியான ஆசிய பெண் கத்ரினா கைப் என லண்டனில் இருந்து வெளிவரும் வார பத்திரிகை ஒன்று கூறியுள்ளது.

லண்டன் வார பத்திரிகை ஒன்று உலகிலேயே கவர்ச்சியான பெண் யார் என்று போட்டியை நடத்தியது.

இதில் நடிகைகள், மொடல் அழகிகள் என 50 பேர் பெயர் போட்டிக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இவர்களில் கத்ரினா கைப் அதிக வாசகர்கள் ஆதரவுடன் முதல் இடம் பிடித்தார். அவர் இந்தப் பட்டத்தை தொடர்ந்து 4வது முறையாக தட்டிச் சென்றுள்ளார்.

கவர்ச்சியான ஆசிய பெண்கள் வரிசையில் நடிகை பிரியங்கா சோப்ரா 2வது இடத்தையும், தொலைக்காட்சி நடிகை தாமி 3வது இடத்தையும் மற்றும் தீபிகா படுகோனே 4வது இடத்தையும் பிடித்துள்ளார்.