×

முத்தம் கொடுக்க மாட்டேன். நயன் தாரா போட்ட கண்டிஷன்கள். சிம்பு அதிர்ச்சி!!


ஹன்சிகாவின் காதலை இழந்ததை கூட பெரிதுபடுத்தாமல் நயன்தாராவுடன் நடித்தால் போதும் என்ற நினைப்புடன் நடித்துக்கொண்டிருந்த சிம்புவுக்கு அடிமேல் அடி விழுந்து கொண்டிருக்கின்றது. முதலில் சிம்புவுடன் நடிப்பதற்கு ஏகப்பட்ட கண்டிஷன்கள் போட்டநயன் தாரா,தற்போது புதுவித கண்டிஷன்கள் போட்டுள்ளார். இதனால் படக்குழுவினர் யாரும் அதிர்ச்சியடையவில்லை. ஆனால் சிம்பு கடும் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
சிம்புவுக்கு ஜோடியாக நயன் தாரா, தற்போது போட்டுள்ள புது கண்டிஷன்கள்
1. படத்தில் முத்தக்காட்சியோ, படுக்கையறை காட்சிகளோ இருக்கக்கூடாது.
2. நெருக்கமாக கட்டிப்பிடிக்கும் காட்சிகளோ, இரட்டை அர்த்த வசனங்கள் உள்ள காட்சிகளோ இருக்கக்கூடாது.
3. சிம்புவுடன் குத்துப்பாட்டுக்கு நடனம்ஆட முடியாது. மெல்லிய அசைவுகள் உள்ள டூயட் பாடல்கள் என்றால் ஓகே.
4. மேலும் படப்பிடிப்புகள் கண்டிப்பாக இரவு நேரங்களில் இருக்கக்கூடாது. அப்படியே இருந்தாலும் துணைக்கு தன்னுடன் தன் சார்பில் ஒருவர் பாதுகாப்பிற்கு இருப்பார்.
மேற்கண்ட கண்டிஷன்களால் பாண்டிராஜ்எவ்வித அதிர்ச்சியும் அடையவில்லை. ஏனெனில் அவர் அமைத்துள்ள திரைக்கதையில் மேற்படி காட்சிகள் எதுவும் இல்லை. ஆனால் இந்தகண்டிஷன்களை கேட்டு சிம்பு இடிந்து போய் உட்கார்ந்துள்ளார். இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதே தவறோ என்று சிந்திக்க ஆரம்பித்துவிட்டார். மீண்டும் ஒரு இமயமலை விசிட்டுக்கு வாய்ப்பு உள்ளது.