×

ரஜினி பிறந்தநாள் . ஒரு சிறப்புப்பார்வை.!!

தமிழ் சினிமா தோன்றிய காலத்தில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட ஹீரோக்கள் தோன்றியிருந்தாலும், ரஜினிக்கு கிடைத்த மாஸ் வேறு எந்த நடிகருக்கும் இதுவரை கிடைத்ததில்லை என்றே கூறலாம். தலைவர் என்றால் ரஜினி என்று கூறும் அளவுக்கு ரசிகர்களின் அழியாப்புகழை பெற்றுவிட்டார் என்றுதான் சொல்லவேண்டும்.
சாதாரண சிவாஜிராவாக இருந்த ரஜினியின் பாலசந்தர் என்ற மாபெரும் இயக்குனரால் 1975ஆம் ஆண்டு ‘அபூர்வ ராகங்கள்’ என்ற படத்தின் அடையாளம் காட்டப்பட்டு 38 வருடங்கள் தொடர்ந்து திரையுலகில் கொடிகட்டி பறந்து வருகிறார்.
ஆசியாவில் ஜாக்கிசானுக்கு அடுத்தபடியாக அதிக சம்பளம் வாங்கிய நடிகர் என்ற பெருமையை சிவாஜி படத்தின் மூலம் பெற்றார். அவர் சிவாஜி படத்திற்காக வாங்கிய சம்பளம் ரூ.26 கோடி. இது சாதாரணமாக ஒரு படத்தின் பட்ஜெட்டைவிட அதிகம்.
1950ஆம் ஆண்டு டிசம்ப 12ஆம் தேதி பெங்களூரில் ராமோஜிராவ் கெய்க்வாட் மற்றும் ஜிஜாபாய் என்ற பெற்றோருக்கு பிறந்த ரஜினிக்கு இரண்டு அண்ணன்களும், ஒரு சகோதரியும் உண்டு. இவருடைய தந்தை ஒரு போலீஸ் கான்ஸ்டபிள்.
1966 முதல் 1973 வரை பெங்களூர் மற்றும் சென்னையில் பல சின்னச்சின்ன வேலைகள் பார்த்த ரஜினி, 1973ஆம் ஆண்டு பெங்களூர் போக்குவரத்து கழகத்தில் பஸ் கண்டக்டராக வேலைக்கு சேர்ந்தார். பின்னர் அதே வருடத்தில்  சென்னை பிலிம் இன்ஸ்ட்டியுட் கல்லூரியில் சேர்ந்து நடிப்பு பயிற்சி பெற்றார். பின்னர் 1975ஆம் ஆண்டில் பாலசந்தரின் அபூர்வ ராகங்கள் படத்தில் ஒரு சிறிய கேரக்டரில் நடித்தார்.
ரஜினி முதன்முதலாக பைரவி என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகம் ஆனார். பின்னர் படிப்படியாக படங்கள் பெருகி, குறுகிய காலத்திலேயே சூப்பர் ஸ்டார் அந்தஸ்தை பெற்றார்.
ரஜின்க்கு லதா என்ற மனைவியும், ஐஸ்வர்யா, செளந்தர்யா என்ற இரண்டு மகள்களும் உண்டு.
ரஜினி இதுவரை தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, ஆங்கிலம் என பல மொழிகளில் 170 படங்கள் வரை நடித்துள்ளார். இவற்றில் பெரும்பாலான திரைப்படங்கள் மாபெரும் வெற்றி பெற்றவை.
ரஜினி நடித்து 2014ஆம் வருடம் திரைக்கு வரும் கோச்சடையான் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருக்கின்றது. இந்த வேளையில் அவருடைய பிறந்தநாளுக்கு தேடிப்பார்.காம் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது.