| தோசை சுடுவதில் நான் ஸ்பெஷலிஸ்ட் என்கிறார் தமன்னா. |
| எட்டு ஆண்டுகளில் முப்பது படங்களில் நடித்து விட்டார் தமன்னா.இவருடன் வந்த பல நடிகைகள் மார்க்கெட் இழந்து ஓரம் கட்டப்பட்டு விட்டனர். தற்போது அஜித்துடன் நடித்த ‘வீரம்’ படம் பொங்கலுக்கு வருகிறது. மேலும் இரண்டு இந்தி படங்களிலும் ஒரு தெலுங்கு படத்திலும் நடிக்கிறார். என்னதான் படங்களில் பிசியாக நடித்தாலும் குடும்பம்தான் தமன்னாவுக்கு ரொம்ப முக்கியமாம். இதுகுறித்து அவர் கூறுகையில், சினிமாவா? குடும்பமா? என்றால் குடும்பத்திற்குதான் முதல் இடம் தருவேன். குடும்பம் எனக்கு ரொம்ப முக்கியம். என் பலம், பலவீனம் இரண்டுமே குடும்பம்தான். மேலும் வீட்டில் இருந்தால் நான் ஒரு நடிகை என்பதையே மறந்து விடுவேன் என்று கூறியுள்ளார். குடும்பம் மட்டுமல்லாமல் சமையலிலும் வெளுத்து வாங்குவாராம், அதிலும் குறிப்பாக தோசையை சிறு கோணல் கூட இல்லாமல் அற்புதமாக சுடுவேன் என்றும் அந்த தோசையை பார்த்தால் எல்லோருக்கும் சாப்பிட ஆர்வம் தோன்றும் எனவும் கூறியுள்ளார். |
