×

விஜய்யை திணறடித்த இரண்டு வெளிநாட்டு அழகிகள். ஜில்லா படக்குழுவினர் அதிர்ச்சி!!



சமீபத்தில் ஜில்லா படத்தின் பாடல் காட்சி ஒன்று ஆந்திராவில் உள்ள ஸ்டுடியோவில் படமாக்கப்பட்டது. எவ்வளவு கஷ்டமான ஸ்டெப்புகளையும் அசால்ட்டாக ஆடும் விஜய்யை உலுக்கி எடுத்துவிட்டனர் இரண்டு நடிகைகள்.

இதுகுறித்துதான் படக்குழுவினர் பரபரப்பாக பேசிவருகின்றனர்.
ஜில்லா படத்தில் ஒரு பாடல் காட்சியை ஐதராபாத்தில் இருக்கும் அன்னபூர்ணா ஸ்டுடியோவில் சமீபத்தில் எடுக்கப்பட்டது.

இந்த பாடல் காட்சிக்கு நடனம் அமைத்திருக்கிறார் ராஜு சுந்தரம். இந்த பாடலுக்கு விஜய் மற்றும் காஜல் அகர்வாலோடு இரண்டு வெளிநாட்டு அழகிகளும் ஆடுகின்றனர்.

ராஜு சுந்தரத்தின் வெகு கஷ்டமான ஸ்டெப்புகளை விஜய் மற்றும் காஜல் அகர்வால் கஷ்டப்பட்டு பயிற்சி செய்து ஆடிக்கொண்டிருக்கும்போது, வெளிநாட்டு அழகிகள் இரண்டு பேர்களும் பிராக்டீஸ் செய்யாமலேயே அசால்ட்டாக ஆடி விஜய் மற்றும் காஜல் அகர்வால் இருவரையும் திணறடிக்கின்றனர்.

ஹாலிவுட்டில் இருவரும் மிகப்பெரிய டான்சர்களாம். அவர்கள் பெயர் Hazel மற்றும் Charlotte என்று கூறப்படுகிறது.

 படுபயங்கர கவர்ச்சியான உடையுடன் ஆடியிருக்கும் இந்த இரண்டு அழகிகளை தவிர்த்து ஒரு ரசிகன் விஜய் மற்றும் காஜல் அகர்வாலின் ஆட்டத்தை பார்ப்பார்களோ என்பது சந்தேகம்தான் என்று படக்குழுவினர் கூறுகின்றஇந்த பாடல் காட்சி திரையில் அனல்பறக்கும் என்று கூறப்படுகிறது.