உதயநிதி ஸ்டாலின், நயன் தாரா நடிக்கும் இது கதிர்வேலன் காதல் படபிடிப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்டதாகவும் ஒரே ஒரு பாடல் காட்சி மட்டுமே பாக்கி இருப்பதாகவும் உதயநிதி நேற்று டுவிட்டரில் தெரிவித்துள்ளார். படத்தில் தொழில்நுட்ப பணிகள் அடுத்த மாதம் தொடங்கப்படும் என்றும் கூடியவிரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்று அவர் மேலும் கூறியுள்ளார்.
சுந்தரபாண்டியன் இயக்குனர் பிரபாகரன் இயக்கும் இது கதிர்வேலன் காதல் படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் முடிந்துவிட்டது. மீதமிருக்கும் ஒரே ஒரு பாடல் காட்சியை ஜெர்மனியில் எடுக்க திட்டமிட்டுள்ளனர். இதற்காக படக்குழுவினர் ஜெர்மனி செல்ல அனைத்து ஏற்பாடுகளும் நடந்து வருகிறது.
இதுவரை எந்த கதாநாயகியுடனும் நெருங்கி நடிக்காத உதயநிதி இந்த பாடல் காட்சியில் நெருக்கமாக நடிக்கவுள்ளதாக படகுழுவினர் கூறுகின்றனர். இந்த பாடல் காட்சியில் நயன் தாராவுக்கு உதட்டுடன் உதடு முத்தக்காட்சியில் உதயநிதி நடிக்க இருப்பதாக அந்த படத்தில் உதவி இயக்குனர் ஒருவர் கூறிவருகிறார்.
இந்த படத்திற்கு ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். ஒளிப்பதிவை பாலசுப்பிரமணியம் கவனிக்கிறார். நீண்ட இடைவேளைக்குபின் ரீ எண்ட்ரி ஆகும் நடிகை சாயாசிங், இந்த படத்தில் ஒரு குத்தாட்டத்தை ஆடியுள்ளார். உதயநிதியின் அனைத்து படங்களில் நடிக்கும் சந்தானம், இந்த படத்திலும் காமெடியில் கலக்கியிருக்கிறார்.
