×

எல்லா ஜில்லாவிலும் டிசம்பர் 21 முதல் ‘ஜில்லா’வின் இசை!!


டிசம்பர் 21ம் திகதி ரசிகர்களை ஆட்டம் போட வைக்க வருகிறது ஜில்லா.

நேசன் இயக்கத்தில் விஜய், மோகன்லால்,  காஜல் அகர்வால், பூர்ணிமா பாக்யராஜ் என நட்சத்திர பட்டாளமே  நடித்துள்ள படம் ஜில்லா,
பொங்கல் ஜல்லிகட்டில் களமிறங்கவிருக்கும் இப்படம் குறித்து தினம் ஒரு தகவல்கள் வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்திக் கொண்டே உள்ளன.

அந்தவகையில் இப்படத்தின் இசை மழை வருகின்ற டிசம்பர் 21ம் திகதி பொழியவிருக்கிறது என்பது இன்னுமொரு தகவல்.
இந்த தகவலை படத்தின் இசையமைப்பாளர் டி.இமான் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.