×

கோச்சடையான் படத்தால் விஜயின் ஜில்லாவிற்கு சிக்கல்?




பெரும் பிரச்னைகளுக்கு பின் விஜய் நடித்த தலைவா படம் வெளியானது. ஆனாலும், படத்திற்கு பெரிய அளவு வரவேற்பு கிடைக்கவில்லை.

இதனால், தான் அடுத்து நடிக்கும் ஜில்லா படத்தின் மூலம் இழப்புகளை சரி செய்துவிடலாம் என, நினைத்திருந்தார் விஜய்.

இந்த படம் பொங்கலுக்கு வெளியாகிறது. இந்நிலையில், ரஜினி நடித்துள்ள கோச்சடையான் படமும் பொங்கலுக்கு வெளியாகும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

 டிசம்பரில் ஆடியோ விழா நடத்திவிட்டு, வருகிற பொங்கலுக்கு, கோச்சடையான் படத்தை வெளியிட, உறுதி செய்துள்ளனர். அதுவும், ஜனவரி, 10ம் தேதியே, படம் தியேட்டர்களுக்கு வருகிறது.

இதன் காரணமாக, விஜயின், ஜில்லா படத்தை பொங்கலுக்கு வெளியிட அறிவித்திருந்த நிறுவனங்கள் அதிர்ச்சியடைந்துஉள்ளன.

அஜீத்தின், வீரம் படத்திற்கும் பிரச்னை ஏற்பட்டுள்ளது. தியேட்டர் பிரச்னை, வசூல் போன்றவை பாதிக்கப்படும் என்பதால், ரிலீஸ் தேதி குறித்து, ஆலோசித்து வருகின்றனர்