×

காஜல் அகர்வாலை டார்ச்சர் செய்யும் ரகசிய காதலன். வெளிநாட்டுக்கு தப்பியோட திட்டமா?


நடிகை காஜல் அகர்வால் தெலுங்கு பட அதிபர் ஒருவரை தீவிரமாக காதலித்துவந்தார். அவருடன் அடிக்கடி வெளிநாட்டுக்கு டேட்டிங் செல்வது, வெளிமாநிலங்களில் சுற்றுவது என்று கடந்த சில மாதங்களாக இந்த காதல் ஜோடி திரிந்தது. இவர்கள் இருவரும் கூடியவிரைவில் திருமணம் செய்வார்கள் என்று தெலுங்கு படவுலகில் கிசுகிசுக்கப்பட்டது. ஆனால் திடீரென இவர்கள் காதலில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
காஜலின் காதலை வீட்டில் மிகக்கடுமையாக எதிர்க்கின்றார்களாம். அவனை மறந்துவிடு என்று கட்டாயப்படுத்துகிறார்களாம். பெற்றோர் சொல்லுக்கு இதுவரை கட்டுப்பட்ட காஜல், காதலை விட்டுக்கொடுக்க முடியாமலும், பெற்றோர்களை எதிர்க்க முடியாமலும் திணறிவருகிறார்.
இந்நிலையில் அந்த காதலர் தற்போது காஜலை திருமணம் செய்யும்படி வற்புறுத்தி வருகிறாராம். திருமணம் செய்யாவிட்டால், தெலுங்கு படவுலகில் உன்னை நடிக்கவிடமாட்டேன் என்று எச்சரிக்கையும் செய்துள்ளார். எனவே தற்போது தெலுங்கு படங்களில் நடிப்பதை தவிர்த்து வருகிறார். சமீபத்தில் ராம்சரண் தேஜாவுடன் ஒரு படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருந்தார். தற்போது அந்த படத்தில் இருந்தும் விலகிவிட்டார். விஜய்யுடன் ஜில்லா படத்தில் மட்டும் நடித்துக்கொண்டிருக்கிறார். இந்த படம் முடிந்தவுடன் வீட்டில் பார்க்கும் மாப்பிள்ளை திருமணம் செய்துகொண்டு வெளிநாட்டில் செட்டிலாக முடிவு செய்துள்ளர் காஜல். ஆனாலும் அந்த தெலுங்கு காதலின் டார்ச்சர் தொடர்ந்து கொண்டிருப்பதால் போலீஸுக்கு போகலாமா என்று பலமாக யோசித்துக்கொண்டிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.