×

தனுஷிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். அக்ஷராவுக்கு ஸ்ருதி அறிவுரை.



தனுஷுடன் அக்ஷரா ஹாசன் ஒரு பாலிவுட் படத்தில் நடிப்பது உறுதியாகிவிட்டது. இதைக் கேள்விப்பட்ட ஸ்ருதிஹாசன், அக்ஷராஹாசனுக்கு சில அறிவுரைகள் கூறியுள்ளாராம்.
தனுஷ் அடுத்த நாள் படப்பிடிப்பிற்கான வசனங்களை முதல்நாளே வீட்டுக்கு எடுத்துக்கொண்டு போய் நிறைய ஹோம் ஒர்க் செய்வார். பின்னர் செட்டில் வந்து அசால்ட்டாக நடித்துவிட்டு போய்விடுவார். 3 படத்தில் நடிக்கும்போது என்னால் அவருடைய நடிப்பிற்கு ஈடுகொடுக்க முடியாமல் போனது இப்படித்தான். அதேபோலத்தான் சோனம் கபூருக்கும் நடந்ததாக கூறினார். எனவே தனுஷுடன் நடிக்கும்போது முன்னேற்பாட்டுடன் பயிற்சி செய்துகொண்டு செட்டுக்கு போக வேண்டும் என்று தங்கைக்கு அறிவுரை சொல்லியிருக்கிறார் ஸ்ருதி.
மேலும் தனுஷுடன் நடிக்கும்போது அவரிடம் நெருங்கி பழகவேண்டாம் என்றும், படப்பிடிப்பில் அவர் ஏதாவது கேட்டால் மட்டும் பதில் சொல், மற்றபடி அவரிடம் தனிப்பட்ட முறையில் எவ்வித பேச்சுவார்த்தையும் வைத்துக்கொள்ள வேண்டாம் என்றும் அக்ஷராவுக்கு கமல்ஹாசனும் அறிவுரை கூறியுள்ளாராம். முன்பு 3 படத்தின்போது தனுஷுக்கு ஸ்ருதிக்கும் தொடர்பு என்று கிசுகிசு கிளம்பியதால் தன் நண்பர் ரஜினி தன்னிடம் வருத்தப்பட்டதாகவும், மீண்டும் ஒருமுறை அப்படி ஒரு நிலைமை வந்துவிடக்கூடாது என்பதில் மிகவும் கவனத்துடன் இருக்கிறாராம் கமல்.
இதனால் இப்பவே அக்ஷரா ஹாசனுக்கு பதட்டம் ஏற்பட்டுள்ளது. ஆனாலும் அக்கா, அப்பா இருக்கும் தைரியத்தில் சமாளித்துவிடலாம் என்று நினைக்கின்றாராம்.