×

சிம்பு – ஹன்சிகா காதல் முறிவால் உற்சாகம் அடைந்த சிவகார்த்திகேயன்!


சிம்புவும் ஹன்சிகாவும் காதலிப்பதாக இருவரும் சில மாதங்களுக்கு முன் ஊடகங்களுக்கு தெரிவித்தனர். பின்னர் இருவரும் அந்நியோன்யமாக இருக்கும் புகைப்படங்களும் வெளியாகி அவர்களின் நெருக்கத்தை உறுதிப்படுத்தியது.இந்நிலையில் சிம்பு நயன் தாராவுடன் மீண்டும் சேர்ந்து நடிப்பதால் சிம்பு – ஹன்சிகா காதல் முறிவடைந்தது. இதுகுறித்து ஹன்சிகா வருத்தத்தில் இருப்பதாக சில இணையதள செய்திகள் கூறியுள்ளன.
ஆனால் சிம்புவை பிரிந்ததால் ஹன்சிகா சோகமாக இல்லை என்றும், இன்னும் சொல்லப்போனால் அவர் தற்போதுதான் மிகவும் குஷியாக இருக்கிறார் என்றும் தன்னுடன் நடிக்கும் மான்கராத்தே படத்தின் டூயட் பாடல் காட்சியின் போது வழக்கத்தைவிட மிகவும் உற்சாகமாக கலந்துகொண்டு நடனம் ஆடினார் என்றும் அவருடைய உற்சாகத்தை கண்டு நானும் கூடுதல் உற்சாகத்துடன் அந்த பாடலுக்கு நடனம் ஆடினேன் என்று சிவகார்த்திகேயன் நேற்று பேட்டியளித்துள்ளார்.
சிம்புவின் பிரிவு என்னை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை என்று ஹன்சிகாவும் கூறியுள்ளார். மேலும் இப்போதைக்கு என் வாழ்க்கையில் காதல், திருமணம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் என்னுடைய முழுக்கவனமும் சினிமாவில் நடிப்பதில் மட்டுமே உள்ளது என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.