×

நயன் – சிம்பு உறவு நீடிக்குமா? நயன்தாரா போட்ட புது கண்டிஷன் !!

மிகப்பெரிய தொகை கொடுக்க தயாரிப்பாளர் சம்மதித்ததால், சிம்புவுடன் நயன் நடிக்க ஒப்புக்கொண்டாலும், மீண்டும் சிம்புவுடன் பழைய உறவை புதுப்பிக்கும் எண்ணம் சிறிதும் இல்லையாம். பாண்டிராஜ் இயக்கத்தில்
சிம்புவுடன் நடிக்கும் நயன், நேற்று நடந்த படத்தின் டிஸ்கஷன் ஒன்றில் கலந்துகொண்டார்.


இதில் நயன், சிம்பு உள்பட படக்குழுவினர்களுக்கு சில கண்டிஷன்கள் போட்டுள்ளார். படப்பிடிப்பு நடக்கும்போது தவிர மற்ற நேரங்களில் சிம்பு தன்னுடன் பேசுவதை தவிர்க்க வேண்டும், படம் குறித்து ஏதாவது ஊடகங்களுக்கு பேட்டி கொடுக்கும்போது என்னை பற்றி எவ்வித கருத்தும் சிம்பு கூறக்கூடாது என்றும் முக்கியமாக பழைய உறவை புதுப்பிக்கும் எண்னத்துடன் தன்னுடன் பழகக்கூடாது என்றும் படத்தின் இயக்குனர் தவிர வேறு யாரும் என்னை தனிமையில் சந்திக்க முயற்சி செய்யக்கூடாது என்றும் அடுக்கடுக்காக பல கண்டிஷன்களை கூறியுள்ளார். இந்த கண்டிஷன்களுக்கு ஒப்புக்கொண்டால் மட்டுமே இந்த படத்தில் நடிக்க இருப்பதாகவும் அவர் உறுதிபட கூறியுள்ளார்.

நயனுடன் நடிப்பதால் காதலி ஹன்சிகாவையே இழக்கும் அளவுக்கு தயாரான சிம்புக்கு இந்த கண்டிஷன்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. படக்குழுவினர் அனைவரும் நயனின் கண்டிஷன்களுக்கு ஒப்புக்கொண்டதால் சிம்புவும் வேறு வழியின்றி ஒப்புக்கொண்டுவிட்டார். எனவே நயன் – சிம்பு இனி சேருவார்கள் என்று ஏதாவது கிசுகிசு வந்தால் ரசிகர்கள் சிறிதும் நம்பவேண்டாம்