×

விஜய்யின் சின்சியாரிட்டி..!!

ஜில்லா படத்தின் மீது மிகுந்த ஈடுபாடு காட்டி நடித்து வருகிறாரம் விஜய்.
ஜப்பானில் உள்ள ஒசாகா இடம் இயக்குனர் நேசனையும், விஜய்யையும் கவர்ந்ததால் சமீபத்தில் படப்பிடிப்புக்காக அங்கு சென்றனர்.

ஒசாகாவில் உள்ள பழமை வாய்ந்த இடங்களும், அதன் பாரம்பரியமும் அப்படியே தங்களது படத்தில் காட்சிப்படுத்தப்பட்டால் நன்றாக இருக்கும் என இருவருமே விரும்பினார்கள்.

ஆனால் அங்கே போயிருந்த நேரத்தில் அங்கு ஏற்பட்ட நில நடுக்கம் மற்றும் தொடர்மழை காரணமாக படப்பிடிப்பு நடத்த, திட்டமிட்டதற்கும் மேலே கொஞ்சம் அதிக நாட்கள் ஆகிவிட்டது.

இதனால் பட்ஜெட்டையும் தாண்டி செலவானது. இருந்தாலும் தயாரிப்பாளரின் மீது அதிகப்படியான செலவை திணிக்க விரும்பாத விஜய், தானே அதை ஏற்றுக்கொண்டிருக்கிறாராம்.