×

சிம்புவுக்கு நயன்தாரா நல்ல ஜோடிதான் – ஹன்சிகா?!!!!


சிம்புவைக் காதலிக்கிறேன் ஆனால் 5 ஆண்டுகள் கழித்து தான் திருமணம் என்று ஓர் அறிவிப்பைக் கொடுத்துவிட்டுப் புதிய படங்களில் ஒப்பந்தமாகி இரவு பகலாக நடித்துக்கொண்டிருக்கிறார் ஹன்சிகா. இந்த நிலையில், அவர்களுக்கிடையே கோடு கிழித்துவிடும் வேலைகளும் நடக்கத்தான் செய்கிறது. ஆனால், எங்கள் காதல் ‘டபுள் ஸ்ட்ராங்க்.’ யாரும் எங்களைத் துண்டாட முடியாது என்று அவர்கள் கூறி வருகின்றனர்.
இந்த நேரத்தில், 7 ஆண்டு களுக்குப் பிறகு தனது முன்னாள் காதலி நயன்தாராவுடன் மீண்டும் சிம்பு ஜோடி சேரப்போகிறார் என்ற செய்திதான் ஹன்சிகா வட்டா ரத்தைத் தூக்கிவாரிப்போட்டிருப் பதாக செய்திகள் பரவிக் கிடக்கிறது. அதோடு, நயன் தாராவுடன் சிம்பு மறுபடியும் ஜோடி சேரப்போவதைக் காரணம் காட்டி காதலை ஹன்சிகா முறித்துக் கொண்டதாகவும் பரபரப்பு செய்திகள் உலவுகின்றன.
ஆனால் இதுபற்றி ஹன்சிகா தரப்பை விசாரிக்க தொடர்பு கொண்டால், அவரது தாய்க்குலம், ‘நோ கமெண்ட்ஸ்’ சொல்லி போனை கட் பண்ணிவிட்டார். கடைசியாக லைனில் வந்த ஹன்சிகா, “சிம்பு – நயன்தாரா இருவரும் முன்னாள் காதலர்கள் என்பது எனக்கும் தெரியும். ஆனபோதும், இப்போது அந்தப் படத்தின் கதைக்கு அவர்கள்தான் பொருத்தமாக இருப்பார்கள் என்கிறபோது சேர்ந்து நடிப்பதில் எந்தத் தவறும் இல்லை.