×

வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜித்…!



அஜித் நடித்த படங்களிலேயே மங்காத்தா படம் அஜித்திற்கு பெரிய ஓபனிங் படமாக அமைந்தது. இந்த படத்தில் அவர் நரைமுடி தலையுடன் வருவார்.

எனக்கு வயது நாற்பதை கடந்துவிட்டது என வெளிப்படையாக பேசி ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தை தக்க வைத்துக் கொண்டார்.


சமீபகாலமாக அவர் நடித்த படங்களிலும் அதே நரைமுடி ஸ்டைலுடன் வந்து கலக்கிக் கொண்டிருக்கிறார். ரசிகர்களுக்கும் அது பிடித்துப்போக இனி என் ஸ்டைல் இது தான் என்று முடிவெடுத்துவிட்டாராம் தல.

தற்போது வெங்கட் பிரபு புதுமுக நடிகர்களை வைத்து இயக்கப்போகும் சின்ன பட்ஜெட் படமொன்றில் அஜித்துக்கு ஒரு கெஸ்ட் ரோல் வைத்துள்ளாராம். இது குறித்து அஜித்திடம் கூறிய வெங்கட் மறுப்பேதும் சொல்லாமல் கண்டிப்பா பண்றேன்னு வாக்கு குடுத்திருக்கிறாரம்.

இதற்கு முன்பு இங்கிலீஷ் விங்கிலீஷ் ஒரு கெஸ்ட் ரோலில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.